யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்தினை சவாலுக்குட்படுத்தும் மனுக்கள் : தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

Published By: Digital Desk 4

04 Mar, 2022 | 08:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி  தாக்கல் செய்யப்பட்ட 5  அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  

Articles Tagged Under: நீதிமன்ற தீர்ப்புகள் | Virakesari.lk

இந்த மனுக்கள்  மீதான பரிசீலனைகளை உயர் நீதிமன்றம்  கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி  நிறைவு செய்தது.

அதன்படி இம்மனுக்களை விசாரணைக்கு எற்பதா தள்ளுபடி செய்வதா எனும் உயர் நீதிமன்றின் தீர்மானத்தை அறிவிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதியர்சர்கள் குழாம் வெள்ளிக்கிழமை ( 4) கூடியது.

இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ,  கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி முதல்   பரிசீலித்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும்  எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய ஐவர் கொண்ட பூரண நீதியரசர்கள் அமர்வு  குறித்த மனுக்களை நிராகரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அறிவித்தது.

 தீர்மானத்தை அரிவித்த பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய, ' இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்ய பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப நீதிமன்றம் தீர்மானிக்கவில்லை எனவும், அதனால் மனுக்களை விசாரணைக்கு ஏற்காது  தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார்.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை மின்சார தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால் பெரேரா ஆகியோரால்  இந்த  அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதிவாதிகள் :

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் 27 பேர், இலங்கை மின்சார சபை, வெஸ்ட் கோஸ்ட் பவர் தனியார் நிறுவனம், லக்தனவி நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், கொள்வனவு செய்யும் அமரிக்க நிறுவனமான நியூ போர்ட்ரிஸ் எனர்ஜி, நிதி,மின்சார, வலு சக்தி அமைச்சுக்களின் செயலர்கள், அமைச்சரவையின் செயலர் உள்ளிட்ட 43 தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இவர்களில் அமைச்சரவை அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்காக சட்ட மா அதிபர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் ஆஜராகும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர்  ( ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா)ஆஜராகிறார்.   மேலும் சில பிரதிவாதிகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகினார்.

மனு விபரம் :

 தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் , கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின்,  இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளில் 40 வீதத்தை பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் நியாயமானது அல்ல என மனுதாரர்கள் தமது மனுக்கள் ஊடாக குறிப்பிட்டுள்ளனர்.

 அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த பிரதிவாதியான அமைச்சரவை தவறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் எரிவாயு உற்பத்தியின் ஏகபோக உரிமையானது உரிய பரிமாற்ற நடவடிக்கையின் ஊடாக  பிரதிவாதியான அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குகளை வழங்குவதில் முறையான விலைமனு கோரல்  நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இந்த பங்குகளை கையளிக்கும் நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய கேள்விகளை எழுப்புவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, எந்த ஒரு நியாயமான ஆய்வும் இன்றி உரிய பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கப் பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் இந்த மனுக்கள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இந் நிலையிலேயே மனுக்களின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய  சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம்  வாதங்களை முன் வைத்து  மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே குறித்த மனுக்கள்  தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17