நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் தொடரப்பட்டுள்ளமைக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு  தெரிவித்துள்ளது.

அமைச்சின் அறிக்கையொன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் பக்கத்தில் ரவி கருணாநாயக்க லங்கா இன்டலிஜன்ஸ் (Ravi Karunanayake Lanka Intelligence)  எனவும், டுவிட்டர் பக்கத்தில் ரவிகேஒபீஸியல் (@RavikOfficial)  என்ற பெயரிலும் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த பக்கங்களினூடாக பகிரப்படும் செய்திக்கும் நிதியமைச்சருக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.