எரிபொருள் சீராக கிடைத்தால் மின் துண்டிப்பு ஏற்படாது -  இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு 

04 Mar, 2022 | 11:28 AM
image

 (இராஜதுரை ஹஷான்)

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சீராக விநியோகித்தால் மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை கிடையாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினமும் நாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறையில் ஏழரை மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

அதற்கமைய இன்று காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 5 மணித்தியாலமும்,மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களும் மின் விநியோகம் சுழற்சி முறையில் துண்டிக்கப்படும்.

நேற்றைய தினம்  தரையிறக்கப்பட்ட 37,300 மெற்றிக்தொன் டீசலில் 8000 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலை மின் உற்பத்தி நிலையங்களின் நடவடிக்கைக்கு விநியோகிக்க வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாளை முதல் மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள்,உராய்வு எண்ணெயை தடையின்றி விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 3000 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58