பங்காளிக் கட்சிகளின் குற்றச்சாட்டு மக்களை ஏமாற்றும் நாடகம் - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

03 Mar, 2022 | 09:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பொறுப்பாகும். அமைச்சுப்பதவிகளை வகித்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதன் மூலம் இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்ள முடியாது. 

அத்துடன் அரசாங்கத்துடன் இருக்கும் பங்காளி கட்சிகள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பது மக்களை ஏமாற்றும் நாடகமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூகொடை பஸ் நிலையத்துக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவகையில் நாடு பாரிய நெருக்கடிகளை சந்துத்து வருகின்றது. 

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் முன்னால் வாகனங்கள் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் இருப்பதை காண்கின்றோம். 

இதனால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

பொது போக்குவரத்து சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பணிக்கு செல்பவர்கள்  உரிய நேரத்துக்கு தொழில் நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதேபோன்று தினமும் ஏழரை மணி நேரம் மின் துண்டிக்கப்படுவதால் வியாபார நிலையங்கள் தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் பாரிய நடத்தை எதிர்கொண்டு வருகின்றன. 

இந்த பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக இருப்பது அரசாங்கத்திடம் டொலர் இல்லாமையாகும். 

அதனால் ஜனாதிபதி உட்பட இந்த அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நாட்டை கொண்டுசெல்ல முடியாது என்தையே இது எடுத்துக்காட்டு கின்றது. 

அதனால் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியாது என்றால் முடியுமான ஒருவருக்கு நாட்டின் ஆட்சியை கையளித்துவிட்டு அரசாங்கம் இரஜினாமா செய்யவேண்டும்.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடிக்கு ஜனாதிபதி, பிரதமர், உடப்ட அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும். 

அவ்வாறு இல்லாமல் அமைச்சரவையில் எடுக்கும் தீர்மானங்களுக்கு கையை உயர்த்திவிட்டு வெளியில் வந்து, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து, குற்றம் சுமத்துவதால் இந்த பொறுப்பில் இருந்து இவர்களுக்கு ஒதுங்கிக்கொள்ள முடியாது. 

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றன. 

அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெளியில் இருந்து விமர்சிப்பது, இது மக்களை ஏமாற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நாடகம். 

அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்து எம்முடனை இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக குரல்கொடுக்க முன்வரவேண்டும். 

அவ்வாறு இல்லாமல் மக்களின் பிரச்சினையை திசை திருப்புவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நாடகம் ஒன்றையே அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் தற்போது அரங்கேற்றி வருகின்றன. மக்கள் ஒருபோதும் இவர்களை நம்பப்போவதில்லை என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04