ஜெனிவா மனித உரிமைப்பேரவை இம்முறையாவது தீர்வு வழங்குமா? - காணாமல் போனவர்களின் உறவுகள்

Published By: Digital Desk 4

03 Mar, 2022 | 12:27 PM
image

இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் இன்றையதினம் (03) வவுனியா பழையபேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு பத்துவருடங்கள் கடக்கின்ற நிலையில் எமக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது.தொலைத்த எமது பிள்ளைகளை காணாமல் சாட்சிகளான பல தாய்மார்கள் மரணித்து விட்டனர். வயது முதிர்ந்த நிலையில் அடுத்த போராட்டத்திற்கு வருவோமா என்ற நம்பிக்கை அற்றநிலையில் இந்த போராடங்களை முன்னெடுத்து வருகின்றோம்.  

இலங்கையில் இனப்படுகொலை தொடர்ச்சியாக இடம்பெறாமல் தடுக்கப்பட வேண்டுமானால் ராஜபக்ஷ குடும்பமும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்த படைத்தளபதிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும். 

யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களை பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசு அவர்களை காணாமல் ஆக்கப்பட்டோர் என தெரிவித்து அவர்களின் குடும்பங்களை ஏமாற்றுகின்றது.

எனவே சர்வதேச சமூகம் எமக்கான நீதியை விரைவில் வழங்க வேண்டும். இம்முறை இடம்பெற்றுவரும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு எமக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு உறுப்புநாடுகள் அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும்.

எமக்கான நீதி கிடைக்கும் வரையில் நாம் எமது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவோம் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24