காலி – கோனாபிணுவல துப்பாக்கி பிரயோகம் : மூவர் கைது

03 Mar, 2022 | 12:33 PM
image

(எம்.மனோசித்ரா)

காலி - கோனாபிணுவல பிரதேசத்தில் துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டு நபரொருவரை கொலை செய்வதற்கு முயற்சித்த சந்தேகநபர்களுக்கு உதவியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி கோனாபிணுவல பொலிஸ் பிரிவில் - கோனாபிணுவல சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்களால் டி.56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்கொண்டு நபரொருவரை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கோனாபிணுவல பொலிஸார் மற்றும் குற்ற விசாரணைப்பிரிவினர் கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப்பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

அதற்கமைய குற்ற விசாரணைப்பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ரத்கம பொலிஸ் பிரிவில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிளை மறைத்து வைப்பதற்கு உதவிய இரு சந்தேகநபர்கள் பியதிகம மற்றும் தடல ஆகிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொள்வதறக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டி.56 ரக துப்பாக்கி காலி - தங்கெதர பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த வீட்டிலிருந்து டி.56 ரக துப்பாக்கிக்கு உபயோகிக்கும் துப்பாக்கி ரவையொன்றும் , 45 கை குண்டுகள் , டி.81 ரக துப்பாக்கி ரவையொன்று , துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளச் சென்ற போது கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் கைபையொன்று , குறித்த மோட்டார் சைக்கிளில் உபயோகிக்கப்படும் போலி இலக்க தகடுகள் இரண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கி மற்றும் ஏனைய பொருட்களை மறைப்பதற்கு உதவிய 46 வயதுடைய சந்தேநகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கோனாபிணுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபர்கள் யார் என்பது இனங்காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38