தொழிற்சங்கங்களின் பொறுப்பற்ற வாக்குறுதிகளினாலேயே தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா சம்பளம் வழங்க முடியாது. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின் மூலம் குறித்த விடயத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. எனவே நாளை மாலை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் கோரி முன்னெடுத்துள்ள எதிர்ப்பு நடவடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.