ரஷ்யா - உக்ரைன் மோதல் இலங்கைக்கு பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தலாம் - கலாநிதி சந்திமா

02 Mar, 2022 | 04:53 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ரஷ்யா உக்ரைன் மோதல் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது. 

அதேபோன்று உணவுப்பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதும் சவாலாக மாறும் என சிறிலங்கா மனிதநேய கட்சியின் தலைவர் கலாநிதி சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

ரஷ்யாஉக்ரைன் மோதல் இலங்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்பு தொடர்பாக கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐராரோப்பிய நாடுகளில் அதிகம் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடாகவும் ஐராரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக காஸ் விநியோகிக்கும் நாடாகவும் ரஷ்யா இருந்துவருகின்றது. 

இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மோதல் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை ஏற்படுத்த ஐராரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்தாலும் காஸுக்கான தடையை ஏற்படுத்தப்போவதில்லை. 

ஏனெனில் ஐராரோப்பா, ஜேர்மன், பெல்ஜியம், நெதர்லாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகளில் தொழிற்சாலைகள் இயங்குவது காஸ் மூலமாகும். 

ரஷ்யாவின் காஸ் விநியோகத்துக்கு தடை விதித்தால் ஐராரோப்பிய நாடுகளின் தொழிற்சாலைகள் செயலிழந்துவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கின்றது.

காஸ் விநியோகத்துக்கான தடையை ஏற்படு்த்தினால் மக்கள் உயிரிழக்க நேரிடும். 

மேலும் ரஷ்யா காஸ், எரிபொருளை விநியோகிக்கும் நாடு மாத்திரமல்ல,  40 வீத கோதுமைமா கிழங்கு, நெல் உற்பத்தி செய்யும் நாடு. கடந்த 6மாதங்களில் இந்த உற்பத்திகள் வீழ்ச்சியடைந்ததால் உலக நாடுகளில் உணவுப்பாெருட்களின் விலை அதிகரித்துள்ளது. 

ரஷ்யா, உக்ரை மோதலால் எரிபொருள், காஸ் மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து செல்வது எதிர்காலத்தில் இலங்கை போன்ற நாடுகளுக்கு பாரியதொரு அழுத்தத்தை ஏற்படுத்தும். 

இலங்கை டொலர் பிரச்சினையால் தற்போது பாரிய எரிபொருள் பிரச்சினைக்கு முகம்கொடுத்துவருகின்றது. 

ஆனால் உணவுப்பிரச்சினை இதனையும் விட பாரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

ஏனெனில் எதிர்வரும் காலங்களில் இந்தியா,சவூதி அரேபியா, மலேசியா, சங்கப்பூர், துர்க்கி போன்ற நாடுகளின் உணவு வகைகள் ஐராரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்படும். 

இதன்போது இலங்கை போன்ற நாடுகள் குறைந்த விலைக்கு உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள பாரியதொரு சவாலை எதிர்கொள்ள நேரிடும். 

இதன்போது நாட்டுக்குள் உணவுப்பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கும். 

மேலும் ரஷ்யா, உக்ரைன் மோதலை விரைவாக நிறைவுக்கு கொண்டுவர உலக தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இல்லாவிட்டால் இந்த மோதல் துர்க்கிக்கும் பரவும் நிலைமையும் இருக்கின்றது. 

ஆசிய நாடுகளுக்கு அதிகம் பழவகைள் மற்றும் போத்தல்களில் அடைத்த உணவுப்பொருட்களை விநியோகிப்பதும் துர்க்கியாகும். 

அதனால் இலங்கை மக்கள் தங்களுக்கு முடியுமான உணவு வகைகளை குறிப்பாக கிழங்கு, வற்றாலை, மரவல்லிக் கிழங்கு போன்ற மரக்கறி செய்கைகளை தங்கள் வீட்டுத்தோட்டங்களில் சிறிதளவேனும் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37