ரஷ்யா - உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..!

02 Mar, 2022 | 12:45 PM
image

உக்ரைன்-ரஷ்யா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் இன்று 7 ஆவது நாளாக நீடிக்கிறது. 

The pair sat opposite each other across a desk in the Kremlin and viewers on social media picked up on the under-pressure Russian leader's apparently pale appearance.

நேற்று முன்தினம் உக்ரைன்-ரஷ்யா இடையே சமரச பேச்சுவார்த்தை இடம்பெற்றதால் ரஷ்ய படைகள் தாக்குதல் வேகத்தை சற்று குறைத்திருந்தது.

ஆனால் எந்தவித ஆக்கபூர்மான முடிவுகளும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நேற்று தீவிரப்படுத்தியது. 

ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்த தனது படைகளுக்கு ரஷ்யா உத்தரவிட்டது.

 Smoke and flames rise up the side of Kyiv's 1,300ft TV tower after Russia bombed it on Tuesday. The tower remained standing but buildings around it were damaged, with some broadcasts knocked off air

இதை தொடர்ந்து ரஷ்ய படைகள் முழு வீச்சில் தாக்க தொடங்கின.

அதன்படி உக்ரைனின் 2 ஆவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் நகரில் நேற்று காலை முதல் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழியத் தொடங்கின. 

போர் விமானங்கள் குண்டுகளை வீச, மற்றொரு புறம் போர் கப்பல்களில் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

கார்கிவ் நகரில் குடியிருப்பு பகுதிகளையொட்டி அமைந்துள்ள அரசு கட்டிடம் ஒன்றின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஏவுகணை தாக்குதலில் அரசு கட்டிடமும், அருகில் உள்ள குடியிருப்புகளும் சின்னாபின்னமாகின.

A damaged administrative building in the aftermath of a Russian shelling in downtown Kharkiv, Ukraine

வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உருக்குலைந்து போயின. இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஓக்திர்கா நகரில் மிகப்பெரிய இராணுவ தளத்தின் மீது ரஷ்ய படைகள் வான்தாக்குதல் நடத்தியதில் உக்ரேனிய வீரர்கள் 70 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

A member of the Slovak Armed Forces carries a child fleeing from Ukraine who arrived in Slovakia with her family, after Russia launched a massive military operation against Ukraine

போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் உயிருக்கு பயந்து சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நிலத்தடி சுரங்களில் பதுங்கியுள்ளனர்.

Mothers and children take shelter in the basement of the Ohmadyt Children's Hospital in Kyiv

அதேவேளையில் ரஷ்ய படைகளின் உக்கிரமான தாக்குதல்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

A Ukrainian child sobs alone in a railways station as Europe faces a fresh refugee crisis as millions are potentially displaced by war

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரசில் நடைபெற்றது.

அப்போது ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என ரஷ்யாவும், உக்ரைனும் அறிவித்தது.

இந்த சூழலில் ரஷ்யா -உக்ரைன் இடையே இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Ukrainian, Russian delegations meeting in Belarus on Monday

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, போர் முடிவுக்கு வருமா என்று உலக நாடுகளிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17