சுதந்திரக் கிண்ண இறுதிப் போட்டியில் வட மாகாண அணி ! பியூஸ்லாஸுக்கு மௌன அஞ்சலி

Published By: Digital Desk 4

01 Mar, 2022 | 09:43 PM
image

(என்.வீ.ஏ,)

கிழக்கு மாகாணத்துக்கு எதிராக மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 2 ஆம் கட்ட அரை இறுதிப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட வட மாகாணம், சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றுக்கொண்டது.

2 கட்டங்களாக நடத்தப்பட்ட அரை இறுதிப் போட்டிகள் நிறைவில் 1 - 0 என்ற ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் வட மாகாணம் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 1 ஆம் கட்ட அரை இறுதிப் போட்டியில் வட மாகாணம் 1 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றிருந்தது.

இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் மறைந்த இலங்கை வீரரும் வடக்கின் மைந்தனுமான டக்சன் பியூஸ்லாஸுக்கு கௌரவம் செலுத்தும் முகமாக அவரது 4 ஆம் இலக்க ஜேர்சியுடன் இரண்டு அணி வீரர்களும், அதிதிகளும், மத்தியஸ்தர்களும், பார்வையாளர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இரண்டாம் கட்ட அரை இறுதிப் போட்டியை அழுத்தத்துக்கு மத்தியில் எதிர்கொண்ட கிழக்கு மாகாண அணி மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும் அவ்வணிக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

இப் போட்டி கிழக்கு மாகாண அணிக்கும் வட மாகாண அணியின் கோல்காப்பாளர் ஜே. அமல்ராஜுக்கும் இடையிலான போட்டியாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது.

வட மாகாண அணி வீரர்களைவிட வேகமாக விளையாடிய கிழக்கு மாகாண அணி வீரர்கள் பல சந்தர்ப்பங்களில் எதிரணியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர்.

வட மாகாண வீரர்கள் தமது எல்லைக்கு பந்து வந்தபோதெல்லாம் அதனைத் தடுத்து எதிரணியின் திசைக்கு உதைப்பதில் குறியாக இருந்தனர்.

வட மாகாணத்துக்கு கிடைத்த கோல் போடும் இரண்டு வாய்ப்புகளை அணித் தலைவர் மரியதாஸ் நிதர்சனும் கே. தனுஷனும் தவறவிட்டனர்.

மறுபுறத்தில் கிழக்கு மாகாண வீரர்கள்  கோல் போடுவதற்கு எடுத்த பல முயற்சிகளை அமல்ராஜ் தடுத்து நிறுத்தி பலத்த பாராட்டைப் பெற்றார்.

கிழக்கு மாகாணம் சார்பாக அணித் தலைவர் எம்.எம்.எம். முஷ்தாக், எம்.ஏ. ஹஜிர் ஹனன், எம்.எம்.எம். முர்சிப், ஏ.எஸ்.எம். பஹாத் ஆகியோர் மிகத் திறமையாக விளையாடியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

கிழக்கு மாகாண கோல்காப்பாளர் எம்.எம். முர்ஷித்தும் மிகத் திறமையாக செயற்பட்டு தனது கோல் எல்லைக்கு வந்த பந்துகளை நேர்த்தியாக தடுத்து நிறுத்தினார்.

ஒட்டுமொத்தத்தில் இந்தப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பாக அமைந்ததுடன் ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர்ந்த மற்றைய நேரங்களில் வீரர்கள் மிகவும் நேர்த்தியாக விளையாடியமை பாராட்டுக்குரியதாகும்.

இதேவேளை, இரத்தினபுரியில் புதன்கிழமை (02) நடைபெறவுள்ள சப்ரகமுவ மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான 2ஆம் கட்ட அரை இறுதிப் போட்டி முடிவில் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில்  வெற்றிபெறும் அணி, வட மாகாணத்தை எதிர்வரும் 5ஆம் திகதி எதிர்த்தாடும்.

இறுதிப் போட்டி பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35