பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது - திலும் அமுனுகம

Published By: Digital Desk 4

01 Mar, 2022 | 10:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது. எரிபொருள் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டால் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Articles Tagged Under: திலும் அமுனுகம | Virakesari.lk

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஏற்பட்டிருக்கும் டீசல் தட்டுப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தனியார் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதி இருக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெயரிடுவதை விரைவாக மேற்கொள்வோம்.

அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பஸ் வண்டிகளுக்கு தேவையான அளவு எரிபொருள் அங்கு நிரப்பிக்கொள்ள முடியும்.

அதற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் கிடைத்ததுவுடன் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் விநியோகிக்க ஆரம்பிப்போம். அதனால் இந்த நடவடிக்கையை விமர்சிக்காமல் தேவையான பஸ் வண்டிகள் மாத்திரம் இங்குவந்து எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம்.

அத்துடன் தற்போதைய மிகவும் கஷ்டமான நிலைமையிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் இருந்து எரிபோருளை நிரப்பிக்கொண்டு பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடும்படும் பஸ் உரிமையாளின் சேவை பாராட்டத்தக்கது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்களில் எந்தவித திருதங்களும் தற்போதைக்கு மேற்கொள்ளப்படாது. ஏனெனில் இறுதியாக பஸ்கட்டண திருத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய அதனை செய்ய முடியாது.

அத்துடன் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருட்களின் விலை அதிகரித்திருக்கும் அளவில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை அதிகரித்தால் பயணிகள் போக்குவரத்துக்கான பஸ் கட்டணத்தில் எந்த மாற்றம் செய்யப்போவதில்லை.

என்றாலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவில் விலை அதிகரிக்கப்பட்டால் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

மேலும் புகையிரத திணைக்களத்தில் எதிர்வரும் 5நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பதால், தற்போதுள்ள நிலைமையில் ரயில் சேவையில் எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11