நுரையீரல் நோயைக் குணப்படுத்தும் நவீன பிராங்கோஸ்கோபி சிகிச்சை

Published By: Robert

12 Oct, 2016 | 03:57 PM
image

நுரையீரல் தொடர்பான நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உண்மை. ஏனெனில் நாம் சுவாசிக்கும் காற்றில் ஏகப்பட்ட மாசுகளை நாம் அனுமதித்துவிட்டோம். அத்துடன் நாம் வசிக்கும் சுற்றுப்புறம் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இல்லை. சுற்றுச்சுழலை பாதிக்கும் ஏராளமான தொழிற்சாலைகளை எம்முடைய வாழ்வாதாரத்திற்காக நாம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம். அத்துடன் வாகனத்தின் பெருக்கத்தையும் அனுமதித்துவிட்டோம். சிகரெட் பிடிக்காதவர்களுக்கு பிடிப்பவர்கள் விடும் புகையால் கூட பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றின் காரணமாக இன்றைய காலத்தில் நுரையீரல் தொடர்பான ஏராளமான நோய்களுக்கு நாம் ஆளாகிறோம். 

தற்போது பிறந்த குழந்தைகளுக்கு கூட பிரான்கைடீஸ் ஸிஸ்டிக்ஸ் எனப்படும் நுரையீரல் நீர் கட்டிகள் ஏற்படுகின்றன. மேலும் ஒரு சில குழந்தைகளுக்கு பிறக்கும் போது நுரையீரலின் சிறுபகுதி ஒட்டாமல் பிரிந்தேயிருக்கும். இதற்கு ஸ்குவாட்ராஸ்டேசன் என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இதனையனைத்தும் இன்றைய நவீன மருத்துவம் குணப்படுத்தும் சிகிச்சைகளை கண்டறிந்து இருக்கிறது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன சாதனம் ப்ராங்கோஸ்கோபி என்பது தான். இதன் மூலம் நுரையீரல் பாதிப்பினை துல்லியமாக கண்டறிய இயலும். குணப்படுத்தவும் இயலும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய், பிற உறுப்புகளின் பாதிப்பால் நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், பணி சார்ந்த இடங்களால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள், நுரையீரலில் தவறுதலாக சென்றடைந்திருக்கும் அந்நிய பொருட்களை கண்டறிதல் ஆகியவற்றை இந்த நவீன சாதனத்தின் மூலம் துல்லியமாகவும் எளிதாகவும் கண்டறிந்து குணப்படுத்தலாம். 

அதே தருணத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காச நோயாளிகள் சளியால் அவஸ்தைப்பட்டால், அந்த சளியை இந்த சாதனத்தின் மூலம் பிரித்து எடுக்கலாம். நுரையீரலில் கட்டிகள் இருந்தால் பயாப்ஸி எடுக்கவும் இது பயன்படுகிறது. நுரையீரலில் இருந்து நீரை எடுத்து புற்றுநோயாளிகளுக்கு பரிசோதிக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. அதேபோல் குரல் நாணில் (வோகல் கார்ட்) பிரச்சினை ஏதும் இருந்தாலும் இதன்மூலம் கண்டறிந்து சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.

டொக்டர் V  சுந்தர்  M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04