(எம்.எம்.சில்வெஸ்டர்)
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் சர்வதேச எடைத்தூக்கல் போட்டியில் உஷான் சாருக்க இலங்கைக்கான 3 ஆவது தங்கத்தை பெற்றக்கொடுத்தன் மூலம், இலங்கை 4 தங்கம் , 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது.
இப்போட்டியில் பதக்கம் வென்றவர்கள் 2022 பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கான தகுதியையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டித் தொடரின் கடைசித் தினமான ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான 109 கிலோ கிராம் எடைக்கு மேற்பட்ட பிரிவில் பங்கேற்ற உஷான் சாருக்க ஸ்னெட்ச் முறையில் 150 கிலோ கிராம் எடையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 180 கிலோ கிராம் எடையும் என மொத்தமாக 330 கிலோ கிராம் எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அன்றைய தினம் ஆண்களுக்கான 109 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் போட்டியிட்ட சானக்க பீட்டர்ஸ் மொத்தமாக 302 கிலோ கிராம் எடையை (ஸ்னெட்ச் 134 கி.கி., கிளீன் அண்ட் ஜேர்க் 168 கி.கி) தூக்கி 4 ஆவது இடத்தைப் பிடித்தார். இதே போட்டிப் பிரிவில் பங்கேற்ற மற்றொரு இலங்கையரான சமன் அபேவிக்ரம மொத்தமாக 296 கிலோ கிராம் எடையை (ஸ்னெட்ச் 131 கி.கி., கிளீன் அண்ட் ஜேர்க் 165 கி.கி) தூக்கி 5 ஆவது இடத்தைப் பிடித்தார்.
சர்வதேச எடைத்தூக்கல் போட்டி இம்மாதம் 25 முதல் 27 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்றது.
ஸ்ரீமாலி சமரகோன், சத்துரங்க லக்மால், இந்திக்க திசாநாயக்க, தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்ததுடன் மனோஜ் மதுவன்த்த, என்டன் சுதேஷ் பீரிஸ் வெள்ளிப் பதக்கத்தையும் , டிலன்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தையும் முன்னதாக வென்றிருந்தனர். இந்நிலையிலேயே, ஞாயிறன்று நடைபெற்ற 109 கிலோ கிராம் எடைக்கு மேற்பட்ட போட்டியில் உஷான் சாருக்க தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இப்போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கையர்களான தினூஷா கோமஸ்,சானக்க பீட்டர்ஸ் , சமன் அபேவிக்ரம மூவரால் மாத்திரம் பதக்கம் வெல்ல முடியாது போனமை துரதிஷ்டமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM