தமக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கக்கோரி கேகாலை நகரில் தொழிலாளர்கள் கண்டி கொழும்பு பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 கோகாலை மாவட்டத்தின் கரண்டபன, வெலிகந்த,  அம்பதெனிய, ஹெவிலிபிட்டிய, அலுத்துவர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களே வீதியில் புரண்டு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தால் கண்டி கொழும்பு பிரதான வீதியின் கோகாலை நகரில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் பொலிஸார் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை வீதியிலிருந்து அகற்றியதோடு போக்குவரத்தையும் சீர்ப்படுத்தினர்.