நெஷனல் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் இரு போட்டிகளும் சமநிலையில் முடிவு

Published By: Digital Desk 4

01 Mar, 2022 | 12:35 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ‍நெஷனல் சுப்பர் லீக் 4 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின்  முதல் இரண்டு  போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தன. 

19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை முதல் ஆரம்பம் |  Virakesari.lk

இப்போட்டிகள் நடைபெற்ற காலி சர்வதேச கிரிக்கெட் மைதான ஆடுகளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதான ஆடுகளம் ஆகிய இரண்டுமே துடுப்பாட்டத்துக்கு சாதகமான மைதானங்களாகவே அமைந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றுவதில் சற்று சிரமம் அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவி்க்கின்றனர்.

காலியில் நடைபெற்ற கண்டி மற்றும் காலி அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 482 ஓட்டங்களை பெற்றது.

இதையடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 465 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

17 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, கொழும்பு அணிக்கும் யாழ்ப்பாண அணிக்குமிடையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற போட்டியும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்து.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி தமது முதல் இன்னிங்ஸில் 555 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 360 ஓட்டங்களை மாத்திரம் குவித்து 195 ஓட்டங்கள் பின்னிலை பெற்றது.

இதன் பின்னர் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து  217 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது போட்டி நிறைவுக்கு வந்தது.

இப்போட்டித் தொடரின் 3 ஆவது மற்றும் 4 ஆவது போட்டிகள் எதிர்வரும் 3 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35