உக்ரைன் - ரஷ்யா முதல் கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு

01 Mar, 2022 | 12:03 PM
image

உக்ரைன் - ரஷ்யா முதல் கட்ட பேச்சு வார்த்தை எவ்வித உடன்பாடுளும் எட்டப்படாமல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து மற்றும் பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Men sit on either side of a long table

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர் 6 நாட்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

உக்ரைனின் தலைநகர் கிவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  

இதற்கிடையில், போரை முடிக்கு கொண்டு வர உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நேற்று பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு இராணுவத்தை வெளியேற்றும்படி ரஷ்யா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.

போரை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

பேச்சுவார்த்தைகள் 5 மணி நேரம் நீடித்ததாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் உதவியாளரும் அந்நாட்டு தூதுக்குழுவின் தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்தார்.

Russia's presidential aide Vladimir Medinsky attends a session of the St. Petersburg International Economic Forum (SPIEF) in Saint Petersburg, Russia, June 3, 2021. REUTERS/Evgenia Novozhenina

இரு நாடுகள் தரப்பில் எடுக்க வேண்டிய பொதுவான நிலைப்பாடுகள் குறித்த சில நடவடிக்கைகள் இந்த பேச்சுவார்த்தையின் போது கண்டறியப்பட்டதாகவும் அடுத்து வரும்  நாட்களில் பேச்சு வார்த்தையை தொடர இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து - பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17