24 மணி நேரமும் மின் துண்டிக்கப்படும் நாள் நீண்ட தூரத்தில் இல்லை - இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு

01 Mar, 2022 | 12:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் 5 மணி நேர மின் துண்டிப்பு 24 மணி நேரமாக மாறும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை.

ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையே இதற்கு காரணமாகும் என இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது கைவசம் இருக்கும் எரிபொருள் தொடர்பாகவும் அதனால் மின்சாரசபை முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாகவும் அரசாங்கமும் நிறுவனங்களும் பொறுப்பற்ற முறையிலேயே கருத்து தெரிவித்து வருகின்றன. 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கும் விடயங்கள் மின்சாரசபைக்கு தெரியாது. 

அதனால் பொறுப்பக்கூற வேண்டிய விடயத்துக்கு பொறுப்புக்கூறாமல் இருக்கும் ஆட்சியாளர்களும் நிறுவன பிரதானிகளுமே நாட்டில் இருக்கின்றனர்.

தற்போது ஒருநாளைக்கு 5மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொண்டு அதற்கான மாற்றுவழியை தேடிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இன்னும் சில தினங்களில் 7மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொண்டு அதற்கான பதிலை தேடவேண்டிவரும். 

இந்நிலையில் 7 மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு 24 மணி நேரம் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ளும் காலம் நீண்ட துரத்தில் இல்லை.  

மின் துண்டிப்பை தொடர்ந்து முன்னெடுக்கின்றார்களே தவிர, இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை அதனால் நாடு பாரிய அழிவுக்கே சென்றுகொண்டிருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38