உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டத்திற்கு சீனா கண்டனம்

Published By: Digital Desk 4

28 Feb, 2022 | 07:50 PM
image

(ஏ.என்.ஐ)

சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் கட்டாயத் தொழிலாளர்களை அழைப்பதை வெளிநாட்டு நிறுவனங்கள் தடைசெய்யும் புதிய அமெரிக்கச் சட்டம் பெய்ஜிங்கைக் கோபப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் 2021 ஆம் ஆண்டில் . உய்குர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டம் கையெழுத்திடப்பட்டது. மேலும் இதனுடன் தொடர்புப்பட்ட கட்டாய உழைப்புக்குப் பொறுப்பான வெளிநாட்டு நபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் கூறப்பட்டது.

அத்தகைய சட்டத்தின் கீழ், ஒரு இறக்குமதியாளர், இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்பு கட்டாய உழைப்பின் விளைவாக இல்லை என்பதற்கான தெளிவான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், சீனாவில் இருந்து பொருட்களை வாங்கும் நிறுவனங்கள், அதன் மூலப்பொருட்களிலிருந்து தொடங்கி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் எதுவும் சீனாவில் கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவற்றின் விநியோகச் சங்கிலிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், உய்குர் முஸ்லிம்களை வெகுஜன தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவதன் மூலமும், அவர்களின் மத நடவடிக்கைகளில் தலையிடுவதன் மூலமும், சமூகத்தின் உறுப்பினர்களை சில வகையான வலுக்கட்டாயமாக மறு கல்வி அல்லது போதனைக்கு அனுப்புவதன் மூலமும் சீனா உலகளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08