மன்னாரை சேர்ந்த தேசிய உதைப்பந்தாட்ட வீரர் மாலைதீவில் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

27 Feb, 2022 | 12:03 PM
image

இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். 

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன்  பியூஸ்லஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

 இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

 அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ,இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இவ்வருடத்திற்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் இரண்டாம் இடத்திற்கு பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58