இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை நேற்று உயிரிழந்தார்.

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திர ஷெட்டி. மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் மகள் ஷில்பா ஷெட்டியுடன் வசித்து வந்தார். தொழில் அதிபரான சுரேந்திர ஷெட்டிக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் மயங்கி விழுந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷில்பா ஷெட்டி தனது தந்தையை உடனே மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில்; சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்திர ஷெட்டி உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. 

இதுபற்றி அறிந்ததும் இந்தி திரையுலக பிரபலங்கள் அவரது வீட்டுக்கு வந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சுரேந்திர ஷெட்டியின் உடல் இன்று காலை 9.30 மணிக்கு வில்லேபார்லேயில் உள்ள பவன்ஹன்ஸ் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.