உக்ரைனிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறினர் - ஐ.நா.சபை

26 Feb, 2022 | 07:47 PM
image

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போரால் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பிவருகின்றனர். 

People leave the Zhuliany neighborhood in Kyiv where apartment blocks hit during Russia's military intervention in Ukraine

அந்த வகையில் ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்ற தகவலை ஐ.நா.சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகதிகளுக்கான ஐ. நா. சபையின் உயர்மட்ட அதிகாரி ஷபியா மண்டோ  கூறுகையில்,  

“உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால், கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 16 ஆயிரம் மக்கள் சர்வதேச எல்லைகளை கடந்துள்ளனர். 

Helga Tarasova hugs her daughter Kira Shapovalova as they wait in a underground shelter during bombing alert in the Ukrainian capital of Kyiv

ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மணி நேரமும் இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது”  என்று தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அன்று மட்டும் ரஷ்ய படையெடுப்பு காரணமாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் உக்ரைனை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

Civilians are seen after an attack on a residential building during Russia's military intervention in Kyiv, Ukraine

ரஷ்ய தாக்குதல் எதிரொலியாக உக்ரைன் நாட்டு குடிமக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பித்து சென்று கொண்டிருக்கின்றனர். 

இந்த போரால் நிலைமை இன்னும் மோசமடையும் பட்சத்தில், கிட்டத்தட்ட 40 இலட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.

அகதிகளாக வெளியேறுபவர்கள் அண்டை நாடுகளான போலாந்து, மோல்டோவா, ஹங்கேரி, ரோமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்.

Indian citizens arrive in Romania by crossing the Siret border after Russia launched military operation in Siret, Romania

உக்ரைனை விட்டு வெளியேறுபவர்களில் எத்தனை பேர் எந்தெந்த நாடுகளில் தஞ்சம் சேருகின்றனர் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால், அதிகபட்சமாக போலாந்தில் அதிகமானோர் நுழைந்துள்ளனர். 

People stand in line to buy drinking water in the separatist-controlled city of Donetsk, Ukraine on Saturday

முன்னதாக, 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உக்ரைனிய ஆக்கிரமிப்பால், அப்போதைய காலகட்டத்திலிருந்தே போலாந்து நாட்டில் 20 இலட்சம் உக்ரைனியர்கள் நிரந்தரமாக வசித்து வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம், அவர்கள் போலாந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Romanian volunteers wait for the Ukrainian citizens which arrive in Romania by crossing the Siret border

கடந்த 24 மணி நேரத்தில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உக்ரைனியர்கள் போலாந்து - உக்ரைன் எல்லையை கடந்துள்ளனர் என்ற தகவலை போலாந்து அரசு தெரிவித்துள்ளது.

போலாந்து நாட்டுக்குள் நுழைவதற்காக,  இருநாட்டு எல்லையில்  உள்ள மேடைகா எல்லை பகுதியில், 15 கிலோ மீற்றர் தூரத்துக்கு  வாகனங்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47