உக்ரைனில் நிலைமை மோசமடையலாம் : குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

26 Feb, 2022 | 03:14 PM
image

உக்ரைனில் முன்னெச்சரிக்கை இன்றி நிலைமை மோசமடையலாம் என்றும் அருகேயுள்ள பாதுகாப்பு முகாம்களில் குடிமக்களை தஞ்சமடையுமாறும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

A protestor holds a placard depicting Russian President Vladimir Putin during a rally in support of Ukraine in Paris yesterday

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் நாட்டின் எல்லையில் இலட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குவித்தது.  

போரை தவிர்க்க ரஷ்யாவிடம் ஐ.நா. அமைப்பு வேண்டுகோள் வைத்தது.

இது ஒருபுறம் இருக்க, தொடர்ந்து உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாடிமிர் புடின் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கின

இன்று 3 ஆவது நாளாக போர் நீடிக்கிறது.

வீரர்களின் உயிரிழப்பு பற்றியும் தகவல் வெளிவருகின்றன.  ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

2 ஆவது நாள் போரில், ரஷ்ய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகொப்டர்கள் மற்றும் 30 க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டன.  ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைனின் 211 இராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷ்யா 3 ஆவது நாளான இன்று தெரிவித்துள்ளது.  

எனினும், உக்ரைன் இராணுவ தாக்குதலில், ரஷ்ய படையை சேர்ந்த 1,000 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று உக்ரைன் இராணுவம் பதிலுக்கு இன்று அறிவித்து உள்ளது.  

ஆனால், ரஷ்ய வீரர்கள் உயிரிழப்புபற்றி ரஷ்ய இராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை.

ரஷ்ய படைகள் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகின்றன.  அந்த நகரின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு வருகின்றன.  

No description available.

இந்த நிலையில், உக்ரைனுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைனில் தொடர்ந்து பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது.  

உக்ரைனில் முன்னெச்சரிக்கை இன்றி நிலைமை மோசமடையலாம்.  அதனால், அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  உங்களுக்கு அருகேயுள்ள பாதுகாப்பு முகாம்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52