உக்ரைனில் இருந்து 50 ஆயிரம் பேர் வெளியேறினர் - ஐ.நா.சபை தகவல்

26 Feb, 2022 | 01:30 PM
image

உக்ரைனில் இருந்து கடந்த 2 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்ததால், மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள்,உயிர் பிழைக்க அவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகிறார்கள்.

A woman with a backpack walks in front of a damaged residential building at Koshytsa Street, a suburb of the Ukrainian capital Kyiv where a military shell struck

நேற்று முன்தினம் ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்ததுமே ஆயிரக்கணக்கானோர் கார்களில் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் தலைநகர் கீவ்வில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உக்ரைனின் அண்டை நாடுகளான மால்டோவா, போலந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மைய தலைவர் பிலிப்போ கிராண்டி கூறும்போது,

UNHCR - UN refugee chief highlights key role for peacemakers

“கடந்த 48 மணிநேரத்தில் உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

இதில் பெரும்பாலான அகதிகள் போலந்து மற்றும் மால்டோவா நாடுகளுக்குள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இன்னும் ஏராளமானோர் எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Ukrainians hold a protest against the Russian invasion of Ukraine outside Downing Street in Westminster last night

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17