அம்பலாங்கொடை பகுதியில் 6 மில்லியன் பெறுமதியான ஸ்மார்ட் கைப்பேசிகளை திருடிய 16 வயது பாடசாலை மாணவன் மற்றும் ஏனைய ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட போது சந்தேக நபர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவன் அளுத்கம பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் இன்று பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.