இராணுவ உதவிகளை சுவீடன் வழங்கியது - உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

25 Feb, 2022 | 10:01 PM
image

சுவீடன் அரசு தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Volodymyr Zelenskyy: Volodymyr Zelenskyy used to be an actor and a comic,  now he's Ukraine's wartime President - The Economic Times

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.

உக்ரைனுக்கு நேரடியாக இராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறிய நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்திருந்தார்.  

இதற்கிடையில் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தன. 

ஒரு சில நேட்டோ நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன. ஆனால் நேரடியாக எந்த நாடும் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளையோ, படைகளையோ அனுப்பவில்லை.

இந்த நிலையில் சுவீடன் அரசு தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் சுவீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாக செலன்ஸ்கி கூறியுள்ளார். 

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள புடினின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

அதேபோல், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவின் சொத்துக்களும்  முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47