சவுதியை சேர்ந்த அபு சின்(19) என்ற இளைஞர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கிறிஸ்டினா கிராக்கட்(21) என்ற பெண்ணிடம் இணையதளம் மூலம் பழகி வந்துள்ளார்.

இணையம் மூலமாக சில வாரங்கள் பேசிப் பழகியபின் கிறிஸ்டினாவிடம், ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று கூற கிறிஸ்டினாவும் புன்னகையுடன் அபுவின் காதலை ஏற்றுக் கொண்டார். நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அபு விளையாட்டாக கிறிஸ்டினாவிடம் கேட்க, அவரும் நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இவர்கள் உரையாடலைக் கண்காணித்த சவூதி பொலிஸார் நாகரிகம் மற்றும் மத மதிப்புகளை மீறியதாக அபு சின்னைக் கைது செய்து கடந்த மாதம் சிறையில் அடைத்தனர். 

தற்போது,பிணையில் வந்திருக்கும் அபு சின் இனி சமூக வலைதளங்களை நீண்ட நாள் பயன்படுத்த மாட்டேன் என்றும் பெண்களுடன் இணையத்தில் உரையாடுவது வருந்தக் கூடிய செயல் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அபு சின் மீதான குற்றம் நிரூபணமானால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 800,000 டொலர் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.