சர்வதேச கூட்டாண்மைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளருடன் பீரிஸ் சந்திப்பு

25 Feb, 2022 | 05:27 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையில் சுகாதாரக் கொள்கை ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களுக்கிடையேயான இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பரிஸில் உள்ள பிரான்ஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற இந்தோ - பசுபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் மட்ட மன்றத்தின் பக்க அம்சமாக, சர்வதேச கூட்டாண்மைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் ஜுட்டா உர்பிலைனனை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சந்தித்தார்.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஆடைகள், சுவையூட்டப்பட்ட தேநீர், கறுவா மற்றும் மிளகு உள்ளிட்ட சுவையூட்டிப் பொருட்கள், மீன்பிடிப் பொருட்கள், மாணிக்கங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிகள் மற்றும் விருந்தோம்பல் துறை, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தல், மின்சாரம், வலு மற்றும் மருந்து உற்பத்தி போன்ற முன்னுரிமைத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதுடன் தொடர்பான கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உர்பிலைனனுடன் அமைச்சர் பீரிஸ் கலந்துரையாடினார்.

சுகாதாரக் கொள்கை ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களுக்கிடையேயான இணைப்பு, தொழிற்பயிற்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மக்கள் தொடர்பு கொள்வதற்கான ஏனைய அம்சங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளை அணுகுவதில் ஐரோப்பிய ஒன்றியம் வெளிநோக்கிப் பார்ப்பதாகவும், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் அடையாளம் காணப்பட்ட நடவடிக்கைகளில் தெளிவான ஒருங்கிணைப்புக்கள் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உர்பிலைனென் அமைச்சர் பீரிஸிடம் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59