முதல் நாள் போரில் 800 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளோம் - உக்ரைன்

25 Feb, 2022 | 01:36 PM
image

முதல் நாள் இடம்பெற்ற மோதலில் ரஷ்ய  தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சக துணை அமைச்சர் ஹன்னா மால்யார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவை குறிவைத்து சரமாரியான குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது, இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ரஷ்யாவின் 7 விமானங்கள், 6 ஹெலிகொப்டர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சக துணை அமைச்சர்  ஹன்னா மால்யார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52