உக்ரைனில் தொடர்கிறது போர் : அச்சத்தில் மக்கள் : தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி கவலை

25 Feb, 2022 | 11:32 AM
image

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்  2 ஆவது நாளாகவும் தொடர்வதால் அங்கு தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி மிகவும் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷ்யா நேற்று போர் தொடுத்தது. 

அங்கு ரஷ்யா மேற்கொண்ட சரமாரியாக குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது.  

உலகின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி இருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் நிலையேற்பட்டுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஆட்கொண்டுள்ளது.

ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் என மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 316 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

 2 ரஷ்ய துருப்புகளை உக்ரைன் இராணுவம் சிறைப்பிடித்தும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷ்யா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள் இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்ய படைகளிடமிருந்து இருந்து நாட்டைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும். 

ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 ஆவது நாளாக தொடர்கிறது, ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ  ரெயில்நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும் ஆண்களை நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளதுடன் கீவ் நகரில் உள்ள மக்களுக்கு 10,000 தானியங்க துப்பாக்கிகள் விநியோகித்துள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின்நிலையத்தில ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தை தொடர்ந்து இன்று வரை கதிரியக்க ஆபத்தை கொண்டுள்ள பகுதியாக செர்னோபில் காணப்படுகின்ற நிலையில் அதனை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவிகளை வழங்க தயாரென உலக வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52