உக்ரேன் - ரஷ்யா மோதலால் எமது நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது - சஜித் கேள்வி

Published By: Vishnu

24 Feb, 2022 | 04:23 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

உக்ரேன், ரஷ்யா மோதல் காரணமாக எமது நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையிலான யுத்த நிலை காரணமாக, அதனால் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு எற்படும் பாதிப்பை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்போகின்றது. 

எமது ஏற்றுமதியில் நுற்றுக்கு 1.49 வீதம் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோன்று ரஷ்யாவுக்கு எமது ஏற்றுமதி வீதம் நூற்றுக்கு 9.57மாகும். சில நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை விதிக்க முயற்சிக்கின்றன. 

இவ்வாறான நிலையில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் நிலையில் மேலும் பிரச்சினைக்கு ஆளாகப்போகின்றது. 

அதனால் இதற்கு தீர்வுகாண அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கின்றேன் என்றார்.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. மாறாக வெளிநாடுகளுக்கு சென்று நாட்டின் கெளரவத்தை பணயம் வைத்து பிச்சை எடுக்கும் கொள்கையே பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37