நாடு முழுவதும் தாக்குதல் மேற்கொள்கிறது ரஷ்யா : உக்ரைன் ஜனாதிபதி : இராணுவ தளங்கள் மீதே தாக்குதல் - ரஷ்யா விளக்கம்

24 Feb, 2022 | 01:16 PM
image

உக்ரைனின் கிழக்கு பகுதியில் மாத்திரமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இராணுவத் தளங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Russia-Ukraine crisis LIVE: Military command centres in 2 Ukrainian cities  attacked, says report | Hindustan Times

உக்ரைன் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், உக்ரைன் தங்களது இலக்கு இல்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்திருந்தார். 

May be an image of fire and outdoors

ஆனால் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில ரஷ்ய இராணுவம் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் தற்பாதுப்பை மேற்கொண்டு வரும் உக்ரைன், ரஷ்யாவின் ஐந்து விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

May be an image of map and text that says 'LITHUANIA Smolensk Minsk Explosions reported in these areas Moscow 200mi. Brest BELARUS 200km POLAND RUSSIA Kursk Kyiv Voronezh Lviv Kharki Poltava O UKRAINE Kramatorsk Dnipro MOLDO Donetsk Luhansk Zaporizhzhia Volgograd ROMANIA Mariup Russian-backed separatist-controlled area odessa Rostov-on-Don Sea of Azov CRIMEA Sevastopol BULGARIA Black Sea Krasnodar CNN Source: Institute or Study War, Maps4News, Google Maps, CNN reporting Henrik Graph:HkPettsson, Pettersson, CNN Annexed by Russia in 2014'

ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், 

May be an image of sky

‘கீவ் பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்து மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். 

நாடு முழுவதும் உள்ள இராணுவ தளங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. நாங்கள் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

May be an image of outdoors

இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகளை வீசவில்லை என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. உக்ரைன் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. குடியிருப்பு பகுதிகளில்  குண்டுகள் வீசப்படவில்லை. உக்ரைனில் உள்ள இராணுவ தளவாடங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இராணுவ மற்றும் விமான தளங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17