வட ஈராக்­கி­லுள்ள குர்திஷ் படை­யினர் சிரிய எல்­லைக்கு அண்­மை­யி­லுள்ள சின்ஜார் நகரை ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து மீளக் கைப்­பற்றும் முக­மாக பிர­தான தாக்­குதல் நட­வ­டிக்­கை­யொன்றை ஆரம்­பித்­துள்­ளனர்.


அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் வான் தாக்­கு­தல்­களின் துணை­யு­ட­னேயே இந்தத் தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
சின்ஜார் நகரை மீளக் ­கைப்­பற்­று­வ­ தா­னது ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் பலம்­பெற்று விளங்கும் ரக்கா மற்றும் மொசூல் நகர்­க­ளுக்­கான விநி­யோகப் பாதையை துண்­டிக்க வழி­வகை செய்யக் கூடி­யது என்­பதால் அந்­ந­கரை கைப்­பற்­று­வது குர்திஷ் படை­யி­னரைப் பொறுத்­த­வரை முக்­கி­யத்­துவம் மிக்­க ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த நக­ரா­னது கடந்த வருடம் .ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கைப்­பற்­றப்­பட்­ட­தை­ய­டுத்து அங்குள்ள மலைப் பிராந்தியத்தில் பெருந்தொகையான யஸிடி இனத்தவர்கள் வெளியேற முடியாது சிக்கியுள்ளனர்.