இந்தியாவின் பலம்வாய்ந்த பந்துவீச்சாளர்களை எமது வீரர்கள் அபாரமாக எதிர்கொள்வார்கள் - தசுன் ஷாணக்க நம்பிக்கை

23 Feb, 2022 | 10:21 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவின் பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை இலங்கையின் முன்வரிசை வீரர்கள் அபாரமாக எதிர்கொண்டு கணிசமான ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை 1 - 4 என்ற ஆட்டக் கணக்கில் பறிகொடுத்த சூட்டோடு இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை இலங்கை வியாழனன்று (24) எதிர்கொள்கின்றது.

'முன்வரிசை துடுப்பாட்டம் பிரகாசிப்பது அவசியம். எமது முன்வரிசை பிரகாசிக்கும்போது எமக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்' என லக்னோவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஷானக்க தெரிவித்தார்.

இந்திய அணியில் மிகத் திறமையான பந்துவீச்சாளர்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய ஷானக்க, தமது முன்வரிசை வீரர்கள் திறமையை வெளிப்படுத்தி  இலங்கை பந்துவீச்சாளர்களின் பணியை இலகுபடுத்த வேண்டும் என்றார்.

அவுஸ்திரேலியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான வனிந்து ஹசரங்க, உபாதைக்குள்ளான குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன ஆகியோர் அணியில் இடம்பெறாதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என ஷானக்கவிடம் கேட்டபோது, 'அணியில் இன்னும் பல சிறந்த துடுப்பாட்டக்காரர்கள், சுழல்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். 

ப்ரவீன் ஜயவிக்ரம, ஜெவ்றி வெண்டர்சே. ஆஷேன் டெனியல் ஆகியோர் எல்பிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். எனவே சமாளிக்கக்கூடியதாக இருக்கும்' என்றார்.

விராத் கோஹ்லி, ரிஷாப் பன்ட் ஆகியோருக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளதுடன் சூரியகுமார் யாதவ், தீப்பக் சஹார் ஆகிய இருவரும் உபாதை காரணமாக விளையாடவில்லை.

எனினும் அவர்கள் இல்லாவிட்டாலும் இந்தியாவிடம் இருந்து பலத்த சவாலை எதிர்நோக்க வேண்டிவரும் என தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.

'ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அனுபவசாலிகள் பலர் இந்திய அணியில் இடம்பெறுகின்றனர். அத்துடன் அவர்களுக்கு சர்வதேச அனுவங்களும் தாராளமாக இருக்கின்றது. அவர்கள் பலவான்கள். ஆனால், எமது அணியும் சிறந்ததே' என அவர் கூறினார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2 ஆம், 3 ஆம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் தரம்சாலாவில் பெப்ரவரி 26, 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ளன.

இந்த இரண்டு நாடுகளும் இதுவரை விளையாடியுள்ள 22 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 14 - 7 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35