அபிப் ஹொசெய்ன் - மெஹிதி ஹசன் ஆகியோரின் வரலாற்று சாதனையான இணைப்பாட்டத்தின் உதவியுடன் ஆப்கானை வென்றது பங்களாதேஷ்

Published By: Digital Desk 4

23 Feb, 2022 | 10:08 PM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கு எதிராக கார்டிவ் அரங்கில் 2017 இல் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷக்கிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ஆகிய இருவரும் சதங்கள் குவித்து பகிர்ந்த 224 ஓட்டங்களின் மூலம் ஈட்டிய வெற்றி  பங்களாதேஷ்  கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வெற்றியாக வரலாற்றில் பதிவாகியிருந்தது.

ஐந்து வருடங்கனின் பின்னர் சட்டாக்ராம் விளையாட்டரங்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக புதன்கிழமை (23) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபிப் ஹொசெய்ன், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7 ஆவது விக்கட்டில் எதிர்நீச்சல் போட்டு 174 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு ஈட்டிக்கொடுத்த வெற்றி மற்றொரு வரலாற்று சாதனையாக பதிவானது.

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 216 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 12ஆவது ஓவரில் 6ஆவது விக்கெட்டை இழந்தபோது வெறும் 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்று திணறிக்கொண்டிருந்தது.

இதன் காரணமாக இலகுவாக வெற்றிபெற்றுவிடலாம் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களது எதிர்பார்ப்பை சிதறடிக்கும் வகையில் அபிப் ஹொசெய்னும், மெஹிதி ஹசன் மிராஸும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி தனி நபர்களுக்கான தத்தமது அதிக ஓட்டங்களைப் பெற்று 49ஆவது ஓவரில் பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர். (பங்களாதேஷ் 48.5 ஓவர்களில் 219 - 6 விக்.)

இருவரும் மிகுந்த நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விதம் வளர்ந்துவரும் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

22 வயதான அபிப் ஹொசெய்ன் 115 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 93 ஓட்டங்களைப் பெற்றார்.

24 வயதுடைய மெஹிதி ஹசன் மிராஸ் 120 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 81 ஒட்டங்கபை; பெற்றார்.

பந்துவீச்சில் ஒரு கட்டத்தில் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 3 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றிய பஸால்ஹக் பாறு{க் அடுத்த 7 ஓவர்களில் 45 ஓட்டங்களைக் கொடுத்ததுடன் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் நஜிபுல்லா ஸத்ரான் 67 ஓட்டங்களை அதிகப்பட்சமாகப் பெற்றார்.

இவரை விட ரஹ்மத் ஷா 34 ஓட்டங்களையும் ஹஷ்மத்துல்லா ஷஹிதி 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முஸ்தாபிஸுர் ரஹ்மான் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் விருது மெஹிதி ஹசன் மிராஸுக்கு வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22