வாகன விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட நால்வர் பலி, மூவர் காயம்

23 Feb, 2022 | 09:25 PM
image

நாட்டில்  இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை :

ஹம்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹம்பாந்தோட்டை -மீகஹஜதுர பிரதான வீதி மின் நிலையத்திற்கு அருகில் மீகஹஜதுர நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்சைக்களுடன் டிபர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன் போது காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய பெண் மற்றும் அவருடைய மகள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 11 வயதுடைய மல்பொத்தாவ, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

விபத்து  தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிலியந்தலை :

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிலியந்தலை -கொட்டாவ பிரதான வீதி பெலென்வத்த பிரதேசத்தில் பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுபாட்டையிழந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 30 வயதுடைய காலி - உனவடுன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கனகராயன்குளம் :

கனகராயன்குளம் கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதி புதுக்குளம் பிரதேசத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நின்றுக் கொண்டிருந்த இருவர் மீது லொறி ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்  போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்ததாகவும் இருவரும் சிகிச்சைக்காக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய கனகரயான்குளம் தெற்கு பகுதியை சேர்ந்தவராவார். 

சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு- வெல்லம்பிட்டி :

வெல்லம்பிட்டி-அவிசாவலை பிரதான வீதியின் கொலன்னாவை பிரதேசத்தில் பாதசாரி மீது காரியாலய ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாதசாரி மீது மோதி விபத்து இடம் பெற்றுள்ளது. 

இதன் போது காயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய லங்சியாவத்தை, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

விபத்தை ஏற்படுத்திய குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31