மின் துண்டிப்பால் உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு அநீதி - ரணில், சஜித்து சபையில் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

23 Feb, 2022 | 04:03 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் முன்னெடுத்துவரும் மின்துண்டிப்பு காரணமாக உயர்தர பரீட்சை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுப்பதற்கும் முடியும். அதனால் மின்துண்டிப்பு மேற்கொள்வதை எதிர்வரும் 5 ஆம் திகதிவரையாவது நிறுத்தவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினர்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) அரசாங்கம் அமுல்படுத்திவரும் மின்துண்டிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கையில்,

நாட்டில் உயர்தர கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இடம்பெறும் இந்த காலகட்டத்தில் மின் துண்டிப்பு இடம்பெறுகின்றது.

இஸட் புள்ளி முறை காரணமாக  பரீட்சை எழுதும் மாணவர்கள் பாரிய பிரச்சினைக்கு ஆளாகின்றனர். அத்துடன் மின் துண்டிப்பு பகுதி பகுதியாகவே  அமுல்படுத்தப்படுகின்றதால், இதுதொடர்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுப்பதற்கு முடியும்.

அதனால்  உயர்தர பரீட்சை முடிவடையும்வரையாவது  மின் துண்டிப்பு மேற்கொள்வதை  தடுத்துக்கொள்ள முயற்சிக்கவேண்டும். அதன் பின்னர் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

அதனைத்தொடந்து எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டில் எரிபொருள் இல்லை. காஸ் இல்லை, மண்ணெண்ணெய் இல்லை இவை அனைத்துக்கும் டொலர் இல்லை.

இதன் காரணமாக நாட்டில் பாரியதொரு சமூக அழிவு ஏற்படும் அபாயம் இருக்கின்றது. என்றாலும் இதுதொடர்பாக பிரதமர் அல்லது நிதி அமைச்சராே அரசாங்கத்தில் இருக்கும் பொறுப்புவாய்ந்த அமைச்சர் யாரும் எந்த விடயத்தையும் தெரிவிப்பதில்லை.

அதேபோன்று பரீட்சை காலத்தில் மின் துண்டிப்பு மேற்கொள்வதில்லை என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்திருந்தார்.

நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது அன்றைய எதிர்க்கட்சி தெரிவித்த விடயம்தான் 3 தடவைகள் மின் துண்டிப்பு மேற்கொண்டால் அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்பதாகும். 

முதல் தடவையாக மின் துண்டிப்பு மேற்கொண்டால் மின்சார சபை தலைவர் வீட்டுக்கு செல்லவேண்டும். இரண்டாவது தடவை மின்துண்டிப்பு மேற்கொண்டால் அமைச்சர் பதவி விலகவேண்டும்.

மூன்றாவது தடவை மின் வெட்டினால் அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்றே தெரிவித்தார்கள்.

அத்துடன் நாட்டு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினை, டொலர் பிரச்சினை தொடர்பாக கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன். ஆனால் இதுவரை நிதி அமைச்சர் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை என்றார்.

இதன்போது எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அதற்கு பதிலளிக்கையில், முன்னாள் பிரதமர் தெரிவித்த விடயம் முக்கியமானது. 

மின் துண்டிப்பு இடம்பெறுவது தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம், மின்சாரசபை தலைவர், பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் உட்பட அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு  அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம்.

இதன்போது தற்போது அமுல்படுத்தப்படும் மின் துண்டிப்பில் மாற்றம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43