நாடு முழுவதும் 02  மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த சனத்தொகையில் 09 சதவீதமாகும்  எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

உலக மனநோய் சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.