பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் ' ஹரக் கட்டா' உள்ளிட்ட 20 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

23 Feb, 2022 | 07:12 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனாக கருதப்படும் தற்போது டுபாயில் மறைந்துள்ளதாக கருதப்படும் தெற்கின் பிரபல பாதாள உலக குழு  தலைவன் 'ஹரக் கட்டா' என பரவலாக அறியப்படும்  நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட  20 போதைப்பொருள் சந்தேக நபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை  21 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான்  புத்திக சி. ராகலவுக்கு அறிவித்தது.

கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணை அதிகாரிகள், விஷேட அறிக்கை ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இந்த விசாரணைகளுக்காக குறித்த 20 சந்தேக நபர்கள் தொடர்பிலும்,  பொலிஸ் போதைப்பொருள்  ஒழிப்பு பணியகத்தின் அறிக்கை,  குற்றப் பதிவுப் பிரிவின் அறிக்கை,  மின்சார சபை அறிக்கை,  தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அறிக்கை,  இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அறிக்கை, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அறிக்கை, பொலிஸ் விஷேட பிரிவின் அறிக்கை,  குடிவரவு குடியகல்வு அறிக்கை, மீன் பிடி திணைக்களத்தின்  மீன்பிடி படகுகள் பதிவு குறித்த அறிக்கை,  கலால் வரித் திணைக்கள அறிக்கை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சி.ஐ.டி.யினர்  நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல,  அனைத்து அறிக்கைகளையும் பெற்று விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிவிக்குமாறு சி.ஐ.டி.யின் சட்டவிரோத சொத்து குறித்த விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41