அபுதாபியிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் சிகரெட்டுகளை கொண்டுவந்த இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் 80 ஆயிரத்து இருநூறு சிகரெட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் கண்டி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.