முன்னணி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

பாயும் புலி, கதகளி, மருது என விஷாலின் படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை மெய்பிக்கும் விதத்தில் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட கத்தி சண்டை வெளியாகவில்லை.

இந்நிலையில் பெரிய வெற்றிக்காக இயக்குநர் மிஷ்கினுடன் கைகோர்த்திருக்கும் விஷால், இப்படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். இதனிடையே படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகை அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த படத்தில் ஏற்கனவே கதையின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வரும் நிலையில் மற்றொரு முன்னணி இளம் நடிகையையும் நடிக்கவைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அக்ஷரா ஹாசன் ஏற்கனவே சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்