மேலும் 45 கழிவுக் கொள்கலன்கள் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பல்

Published By: Vishnu

21 Feb, 2022 | 06:32 PM
image

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 263 கழிவுகள் அடங்கிய கொள்கலன்களில் மேலும் 45 கொள்கலன்களை இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்திற்கு நேற்று வந்தடைந்த எவர் ஜீனியஸ் என்ற கப்பலின் மூலம் இந்த கொள்கலன்கள் இன்று காலை மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்த கப்பல் இன்று இரவு 8.00 மணியளவில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட உள்ளது.

2019 ஆம் ஆண்டில், இலங்கை சுங்கப் பிரிவின் விசாரணையில், பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வகைப்படுத்தப்படாத மற்றும் அபாயகரமான கழிவுகள் அடங்கிய 263 கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

133 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 130 கொள்கலன்கள் ஏற்கனவே துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டுநாயக்கவில் உள்ள முதலீட்டுச் சபையின் கீழ் இயங்கும் தனியார் நிறுவனமொன்றின் வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

இந்த கொள்கலன்கள் உடன்படிக்கையின் விதிகளுக்கு மாறாகவும், தேசிய சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தின் விதிகளை மீறும் வகையிலும் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்தது.

பின்னர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 263 கொள்கலன்களையும் பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன்படி  2020 ஆம் ஆண்டு 133 கழிவு கொள்கலன்களை திருப்பி அனுப்ப இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்தது.

மேலும், கட்டுநாயக்கவில் அமைந்துள்ள தனியார் நிறுவன வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 130 கொள்கலன்களை இலங்கை சுங்கம் பாதுகாத்துள்ளதுடன், கடந்த வருடத்தில் ஒன்பது தடவைகளில் 85 கொள்கலன்களை பிரித்தானியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36