ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பது சரியா ? பிழையா ? - முடிந்தால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் - சம்பிக்க சவால்

21 Feb, 2022 | 05:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் இருக்கும் அதிகாரத்துக்கமைய தனது பதவிக்காலத்தில் முழுமையாக இருப்பது சரியா பிழையா என்பதை அறிந்துகொள்ள முடியுமானால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பபொன்றை நடத்தவேண்டும். 

May be an image of 1 person, standing, indoor and text that says 'ගොඩ නගම ontohope RESCU உயர்வோம் ගොඩ உயர்த்து THR உயர்வோ න ESCUC ගොඩ එමු SCUE உயர்த்துவோம் த்துவோம் உயர்வோம் ගොඩ එමු RESCUE ගොඩ HRIVE உயர்த்துவோம் ගොඩ නගමු &THRI 43 ontohope RESCUE THRIVE ය ESCUE THRIVE உயர்த்துவோம் ගොඩා ர்வோம் ர்த்துவோம் ගොඩ ගොඩ නගමු RESCUE THRIV RESCUE THRIVE RESCUE &THRIVE உயர்வோம் உயர்த்துவோம் ගො ගෙ உயர்வோம் உயர்த்துவோம் ගොඩ එමු ගොඩ නග காத்திருப்போம் உயர்வோம் உயர்த்துவோம் ගොඩ එමු ගොඩ නගම RESCU &THRIVE'

அத்துடன் ஈஸ்டர் தாக்குதலில் நீதியை பெற்றுக்கொடுக்க தவறிய காரணத்தினால் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் சாத்தியம் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

43 ஆவது படையணியின் மாவட்ட சம்மேளனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அனுராதபுரத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மழை இல்லாமை போன்ற இயற்கை அனத்தங்கள் காரணமாகவே நாட்டில் மின் துண்டிப்பு இடம்பெற்றது.

 என்றாலும் தற்போது டொலர் இல்லாத காரணத்தினால் நாட்டில் மின்துண்டிப்பு இடம்பெறுகின்றது டொலர் இல்லாத காரணத்துக்காக மின் துண்டிப்பு மேற்கொள்ளும் ஒரே அரசாங்கம் தற்போதைய அரசாங்கமாகும். நாட்டுக்கு தாங்கிக்கொள்ள முடியாத வட்டி முறையின் கீழ் கடன் பெற்றுக்கொள்ளல், பிரயோசனம் இல்லாத அபிவிருத்திகளுக்காக முதலீடு செய்தல், அந்த கடன் பணத்தை மோசடி செய்தல் போன்ற காரணத்தினாலே டொலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது.

May be an image of 2 people and people standing

அத்துடன் டொலர் பற்றாக்குறையை மறைப்பதற்காக 80வகையான மருந்துப்பொருட்கள், மால்மா, உரம் எரிபொருள் மற்றும் எரிவாயு கொண்டுவருவதை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. 

நாட்டுக்கு தேவையில்லாத விமானம் கொண்டுவருவதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை செலுத்துவதற்கு கடந்த தினங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

நாடு வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் 200கோடி டொலர்களை அரசாங்கம் செலுத்தவேண்டி இருக்கின்றது. என்றாலும் இந்த கடன் தொகையை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.

அத்துடன் தற்போது நாட்டில் இடம்பெறும் அவசர எரிபொருள் இறக்குமதியாலும் நிதி மோசடியே இடம்பெறுகின்றது. எத்தனோல் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக மொனராகலை பிரதேசத்தில் 60ஆயிரம் ஏக்கர்வரையான காணி துப்புரவு செய்யப்பட்டிருக்கிறது. 

விடுதலைப்புலிகள் நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட முறையை பின்பற்றியே அரசாங்கம் நிதி வியாபாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றது.

May be an image of 3 people, people standing and indoor

 அதனால் புதிய அரசாங்கம் ஒன்று அமையும்வரை எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் போட் சிட்டியில் முதலீடு செய்யப்போவதில்லை.

மேலும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும், அரசாங்கத்தில் இருக்கும் தலைவர்களுக்கு தேவையான முறையில் பணம் கொள்ளையடிப்பதற்கு இருக்கும் பயத்திலாகும். அதனால் சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு 21ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து அனுமதிக்கவேண்டும்.

May be an image of 7 people, people standing and indoor

மேலும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளதால், இடம்பெற இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்போது இலங்கைக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்க்கப்பட இருக்கின்றது. இதன் காரணமாக ஜீ.எஸ்.பி சலுகை நிறுத்தப்பட்டால் நாட்டுக்கு கிடைக்கும் டொலர் தொகையும் இல்லாமல்போகும்.

அதனால் இந்நிலையில் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் இருக்கும் அதிகாரத்துக்கமைய தனது பதவிக்காலத்தில் முழுமையாக இருப்பது சரியா பிழையா என்பதை அறிந்துகொள்ள முடியுமானால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பபொன்றை நடத்தவேண்டும் என ஜனாதிபதியை கேட்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19