டொலர் இன்மையால் 3 நாட்களாக துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இரு எரிபொருள் கப்பல்கள் - ஐ.தே.க. தகவல்

21 Feb, 2022 | 04:45 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள இரு எரிபொருள் கப்பல்கள் டொலர் இன்மையினால் கடந்த மூன்று நாட்களாக துறைமுகத்திலேயே நங்கூரமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

அரசாங்கம் உடனடி ஒழுங்கு முறையின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்த போதிலும், டொலர் நெருக்கடியின் காரணமாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 

இரண்டு கப்பல்களையும் தொடர்ந்தும் இவ்வாறு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் எரிபொருளுக்கான நிறுத்தக் கட்டணத்தையும் அரசாங்கம் செலுத்த வேண்டும்.

டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களே இவ்வாறு நங்கூரமிடப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் , 7 நாட்களுக்கு தேவையான டீசலும் மாத்திரமே காணப்படுவதாக எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் மூலம் அறியக்கிடைத்துள்ளது.

இவ்வாறான நிலைமையின் கீழ் எதிர்வரும் நாட்களில் தீவிரமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44