ஐ.எஸ். தீவிராத அமைப்பு ஈராக் மற்றும் சிரியாவில் வசப்படுத்தியிருக்கும் நிலப்பரப்பானது அளவில் இலங்கையின் பரப்பளவு என ஐ.எச்.எஸ். மார்க்கிட் எனப்படும் ஆய்வு இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த அளவானது கடந்த காலத்தை விட 16 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐ.எஸ். அமைப்பு  வசப்படுத்தியிருந்த நிலப்பரப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு 90 ஆயிரத்து 800 சதுர கிலோமீற்றரில் இருந்து 14 சதவீதம் வீழ்ச்சியடைந்து 78 ஆயிரம் சதுரகிலோ மீற்றர்களாக குறைவடைந்தது.

இந்த எண்ணிக்கை இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் 16 சதவீதமாக வீழ்ச்சியடைந்து தற்போது 65 ஆயிரம் சதுர கிலேமீற்றர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பரப்பளவு 65 ஆயிரத்து 610 கிலோமீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.