சந்தைகளில் காலாவதியான கருவாடுகளின் மீது பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஊற்றி வெயிலில் காயவைத்து மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது காலாவதியாகி புழுக்களுடன் காணப்படும் கருவாடுகளின் மீதே இவ்வாறு பெற்றோல் ஊற்றி வெயிலில் காயவைத்து விற்கப்படுகின்றன.

இவ்வாறு கருவாடுகளின் மீது பெற்றோர் ஊற்றி வெயிலில் காய வைக்கும் போது, பெற்றோல் சூரிய வெப்பத்திற்கு ஆவியாக சென்று விடும். இது நுகர்வோர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என விற்பனையார்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது அக்காலம் முதல் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. குறிப்பாக சந்தையில் உள்ள பெரும்பாலான கருவாடுகள் இவ்வாறு உலரவிடப்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில் கருவாடுகளை உலர வைப்பது பெரும் கடினம். இதன் போது கருவாடுகளில் புழுக்கள் உருவாகும். இவற்றை இல்லாமல் செய்ய பெற்றோல் ஊற்றியே உலர வைப்போம் என கருவாடு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.