மறைந்த ஸ்ரீ சங்கரின் 42 ஆவது நினைவு தினம்

19 Feb, 2022 | 01:22 PM
image

நம்நாட்டு கலைஞர் "ஸ்ரீ சங்கரின்" நினைவு தினம் 0.1.2022 ஆகும். விரைவில் அன்னாரின் நினைவஞ்சலி தினம் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கின்றது என்பதையும் இந்த நினைவுதின நிகழ்வில் அண்மையில் காலமான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அரசரட்ணத்தின் நினைவஞ்சலி கூட்டம் நடைபெறுமெனவும் ஸ்ரீ சங்கர் நற்பணி மன்றம் அறிவித்துள்ளது.

இலங்கை கலைஞர்களில் மறைந்தும் மறையாமல் வாழும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் தான் அமரர் "ஸ்ரீ சங்கர்". இலங்கையில் தயாரான குத்துவிளக்கு, கிங்ஸ்லி செல்லையாவின் "மஞ்சள் குங்குமம்" ஆகிய திரை காவியங்களிலும் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "ராஜராஜ சோழன்", "பைலட் பிரேம்நாத்" ஆகிய படங்களிலும் நடித்தவர். இதில் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவர் ஆக தோன்றினார். 

திரைப்படக் கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களை ரசிகர்கள் மறவாமல் நினைவு கூருவது வழமை. தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி போன்ற கலைஞர்களை வருடம் தோறும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருவதை நாம் அறிவோம்.

அதுபோன்று நம்நாட்டு கலைஞர் "ஸ்ரீ சங்கரின்" நினைவு தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கை நாடக உலகிலும், தமிழ் சினிமா உலகிலும் தனது முத்திரையைப் பதித்து, தன் வாழ்வை திரை உலகத்திட்காகவும், நாடகத்திற்காகவும் தன் உழைப்பையும் உயிரையும் கொடுத்தவர் அமரர் ஸ்ரீ சங்கர் அவர்கள். 

மறைந்த ஸ்ரீ சங்கர் தான் நடித்த மஞ்சள் குங்குமம் படத்தை விஜயா ஸ்டூடியோவில் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார். அதன் பின்னர் இலங்கை சினிமா உலகையும் அதே நேரத்தில் நாடகத்தையும் மறக்கவில்லை தொடர்ந்து நாடகங்களில் நடிக்கவும், தயாரிக்கவும் முழுமூச்சாக செயல்பட்டார். 

ஸ்ரீ சங்கர் நடித்த மேடை நாடகங்களில் கொள்ளைக்காரன், தங்கப்பதக்கம், கவரிமான் போன்ற பல நாடகங்களை மேடையேற்றி நடித்துள்ளார். அவற்றுள் அக்காலத்திலேயே கொள்ளைக்காரன் நாடகத்தை மேடை ஏற்றுவதற்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாவை செலவு செய்திருக்கிறார்.

மஞ்சள் குங்குமம் நாடகத்திலும் இவர் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்தார். அன்னாருக்கு உருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிவரை தமிழ் கலை உலகத்துக்கு இவர் செய்த சேவைகள் மறப்பதற்கன்று. அன்னாரது நினைவுதினம் 20.1.2022 ஆகும். விரைவில் அன்னாரின் நினைவஞ்சலி தினம் இம்மாத இறுதியில் நடைபெற இருக்கின்றது என்பதையும் அறியத்தருகின்றோம். 

இந்த நினைவுதின நிகழ்வில் அண்மையில் காலமான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அரசரட்ணம் அவர்களுக்கும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : பேராசிரியர்...

2024-04-16 12:46:12
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46
news-image

USKU அமைப்பின் சர்வதேச பொதுக்கூட்டம் 2024

2024-04-09 12:56:17