மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித அக்கறையுமில்லை : ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது - பிரதான எதிரணி

Published By: Digital Desk 3

19 Feb, 2022 | 09:50 AM
image

(நா.தனுஜா)

நாடு சுதந்திரமடைந்து 74 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குக் அயல்நாடுகளிடம் கையேந்தவேண்டிய நிலையேற்பட்டிருக்கின்றது. நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களின் நலன் தொடர்பில் சிறிதும் அக்கறை காண்பிக்காத தற்போதைய அரசாங்கத்தின் ஒரேயொரு நோக்கம் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது மாத்திரமேயாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறுவதற்கு முன்னர் இனம், மதம் மற்றும் நாட்டின் கௌரவம் தொடர்பில் பேசியது. ஆனால் தற்போது என்ன நேர்ந்திருக்கின்றது? தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதாகக் கூறிய அரசாங்கம், இன்றளவிலே மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியாத சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றது. 

துப்பாக்கியைப் பகிரங்கமாக எடுத்துச்சென்று துப்பாக்கிச்சூடு நடத்துகின்ற சம்பவங்கள் அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கப்படுகின்றன. 

குறிப்பாக அண்மையாகாலங்களில் கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தி, மக்கள் வாழ்வதற்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன?  

நாட்டின் 74 ஆவது சுதந்திரதினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டதுடன் அதற்கென முப்படைகளாலும் பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டது. 

நாடு பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய மிகையான செலவுகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் என்ன? எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள். 

சுதந்திரதினத்தை மிகவும் எளிமையான முறையில் கொண்டாடவேண்டிய அவசியமேற்பட்டிருக்கும் சூழ்நிலையிலேயே அரசாங்கம் அநாவசியமான செலவுகளைச் செய்துவருகின்றது. நாடு சுதந்திரமடைந்து 74 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குக் கையேந்தவேண்டிய நிலையேற்பட்டிருக்கின்றது.

எரிபொருள், உணவுப்பொருள் ஆகியவற்றைப் பெறுவதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அயல்நாடுகளிடம் தங்கியிருக்கவேண்டியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு எவ்வாறு நன்மதிப்பைக்கொண்டிருக்கும்?

இன்றளவில் எரிபொருள், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். கடந்த சிலமாதங்களாக நாடளாவிய ரீதியில் பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களால் உயிருக்கும் சொத்துக்களுக்கும் பாரிய தேசம் ஏற்பட்டது. 

ஆனால் சம்பந்தப்பட்ட எரிவாயு சிலிண்டர் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் தற்போதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் நலன் தொடர்பில் சிறிதும் அக்கறை காண்பிக்காத தற்போதைய அரசாங்கத்தின் ஒரேயொரு நோக்கம் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது மாத்திரமேயாகும்.

குருணாகல், பொலனறுவை, அநுராதபுரம், திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாய உற்பத்தி கணிசமானளவு வீழச்சிகண்டுள்ளது. இம்மாகாணங்களில் பதிவான விளைச்சல் வெறுமனே 30 சதவீதமாகவே காணப்படுகின்றது. 

இரசாயன உர இறக்குமதி தடைசெய்யப்பட்டதன் விளைவாக விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கத்திற்குப் பொறுப்புக்கூறப்போவது யார்? கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அநேகமான நாடுகள் உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதில் விசேட கவனம்செலுத்தின. 

இருப்பினும் எமது நாட்டின் அரசாங்கம் எவ்வித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமற்ற முறையற்ற தீர்மானத்தை மேற்கொண்டு விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. 

அதன்விளைவாக நெல்லுற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த எமது நாடு, தற்போது வெளிநாடுகளிலிருந்து நெல்லை இறக்குமதி செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41