சீனா - இலங்கை நட்புறவை தொடர்ந்தும் வலுப்படுத்துவது சகலரதும் பொறுப்பாகும் - மஹிந்த

Published By: Digital Desk 4

18 Feb, 2022 | 05:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உலகின் பிரதான வர்த்தக சந்தையாக சீனா உள்ளதுடன் பொருளாதார ரீதியிலும்  பலம்பெற்றுள்ள நாடாக சீனா முன்னேற்றமடைந்துள்ளது.

சீனாவினால்  முழு ஆசிய கண்டமும் மாற்றமடைந்துள்ளது. தீர்மானமிக்க சந்தர்ப்பங்களில் சீனா இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

சீனா-இலங்கை நட்புறவை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீன- இலங்கை இராஜதந்திர உறவின் 65 வருடகால பூர்த்தி மற்றும் இறப்பர்-அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70ஆண்டுகள் நிறைவுப்பெற்றதை முன்னிட்டு  கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு பலமான வலுவடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள சீன நாட்டு ஜனாதிபதிக்கு இச்சந்தர்ப்பத்தின் போது நன்றியினை தெரிவித்துக் கொள்வது அவசியமாகும்.

சீனா நீண்டகால வரலாற்றிற்கு உரிமை கொண்டுள்ளது.ஒரு துறையினை அடிப்படையாகக் கொண்டு சீனா வரலாற்று ரீதியில் முன்னேற்றமடைவதற்கு சீன கம்யூனிச கட்சியின் கொள்கை மூலாதாரகமாக அமைந்துள்ளது.சீனா வரலாற்று ரீதியில் பிற நாடுகளின் மீது ஆக்கிரமிப்புக்களை முன்னெடுத்ததில்லை. அத்துடன் தனது தாய்நாட்டை பிற நாட்டவர்களுக்கு விட்டுக்கொடுக்கவுமில்லை.

பலம்வாய்ந்த நாடுகள் சீனாவின் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதை வரலாற்று ரீதியில் விளங்கிக்கொள்ள முடியும்.சீனா ஒற்றை இராச்சியமாக செயற்படுவதால் இன்றும் பலமாக உள்ளது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டது என வரலாற்று ரீதியில் குறிப்பிடப்படுகிறது.

பௌத்த மதம்,சர்வதேச வர்த்தகம்,கலாசார உறவு ஆகிய விடயங்கள் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலும்,நாட்டு மக்கள் மத்தியிலும் நல்லுறவு காணப்படுகிறது.

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் சீன இராச்சியம் 1949ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது.அரசியல் ரீதியில் சீன அரச தலைவர்களுடன் நல்லுறவை பேணுவதற்கான நடவடிக்கையினை வைத்தியர் சுகீஷ்வர விக்ரமசிங்க மேற்கொண்டார்.

1945ஆம் ஆண்டு பெரிஸ் நகரில் இடம்பெற்ற உலக தொழிலாளர் மாநாட்டில் அவர் கலந்துக் கொண்டார்.அந்த மாநாட்டில் இருந்து இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் இராஜதந்திர உறவு ஆரம்பமானது.

இலங்கையின் அரசியல் தலைவர்களான பிலிப் குணவர்தன,எஸ்.டி.பண்டாரநாயக்க,எட்மன் சமரகோன் ஆகியோர் சீனாவிற்கு முதலாவது அரசியல் ரீதியான விஜயத்தை மேற்கொண்டார்கள்.இறப்பர்-அpசி ஒப்பந்தம் (1952) இருநாடுகளின் நட்பு நிலைமையினை மேலும் வலுப்படுத்தியது.

1978ஆம் ஆண்டு சீனா புதிய பொருளாதார கொள்கைக்குள் பிரவேசித்தது.1978 ஆம் முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சீனா பொருளாதார ரீதியில் துரிதமாக முன்னேற்றமடைந்தது.

முதலாவதாக புதிய பட்டுப்பாதை செயற்திட்டத்தை சீனா செயற்படுத்தியது.இலங்கை அதில் முதல் உறுப்பு நாடாக காணப்படுகிறது.ஏழ்மையினை இல்லாதொழிப்பது சீனாவின் இரண்டாவது கொள்கையாக காணப்பட்டது.800 மில்லியன் மக்களை ஏழ்மையில் இருந்து விடுவிக்கும் திட்டத்தில் சீனா வெற்றிக்கண்டுள்ளது.

உலகின் பிரதான வர்த்தக சந்தையாக சீனா உள்ளது.அத்துடன் பொருளாதார ரீதியில் பலம்பெற்றுள்ள நாடாக சீனா முன்னேற்றமடைந்துள்ளது.சீனாவினால் ஆசிய கண்டமும் மாற்றமடைந்துள்ளது.இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவு பலமானதாக உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டும்.

சீனாவின் ஜனாதிபதி சி.ஜின் பிங் எமது தனிப்பட்ட நண்பராக உள்ளதுடன் இலங்கையின் நண்பராவார்.இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு அவர் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

தீர்மானமிக்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும் என்றார்.

இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர் பாரர்ளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37