ஜெனிவாவிற்கு நாளை பதில் கடிதம் அனுப்புகிறது இலங்கை - நம்பிக்கையுடன் உள்ளோம் என்கிறார் பீரிஸ்

Published By: Digital Desk 3

17 Feb, 2022 | 04:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை  அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும். ஜெனிவா விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு நாளை பதிலளிக்கப்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் முன்னெடுத்த பல விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தினால் தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்படுகின்றன.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்,நட்டஈடு வழங்கல் அலுவலகம் ஆகியவற்றின் பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை செயற்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதை எதிர்க்கட்சியில் இருக்கும் போதிலிருந்து தெளிவாக குறிப்பிட்டு வருகிறோம்.ஆட்சிக்கு வந்ததன் பிறகு அதனை மாற்றிக்கொள்ள முடியாது.

இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள்,பிரேரணைகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க முடியாது என்பதை சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளோம்.

அதற்கமைவாகவே அரசாங்கம் அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்தை இரத்து செய்ததுடன்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30.1 பிரேரனைக்கு இணையனுசரணை வழங்குவதில் இருந்து விலகியது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம்  தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் எதிர்வரும் மாதம் 03ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிப்பார்.

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்து ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு  இன்று அல்லது நாளை பதிலளிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான விவாதத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும்.இலங்கையின் நிலைப்பாட்டை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49