நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாகவே உள்ளன. அதற்கமைய அண்மையில் 4 ஆவது முறையாக திருத்தம் செய்யப்பட்ட வற் வரி சட்டமூலமும் அரசியலமைப்பிற்கு முரணானதாகவே அமைந்துள்ளதென பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாகொடையில் அமைந்துள்ள தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.